தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய சமூக ஊடகத்தில் பைடன், கமலா ஹாரிஸ்

1 mins read
34aec465-7a27-44bb-80cf-049524cdb035
முன்னதாக டுவிட்டர் என்றிருந்தது பின்னர் ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் கண்டது. அதற்கு எதிராக ‘திரெட்ஸ்’ சமூக ஊடகம் தொடங்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: எலோன் மஸ்க்கின் ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்திற்கு எதிராகத் தொடங்கப்பட்ட மேட்டாவின் ‘திரெட்ஸ்’ தளத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிதாகச் சேர்ந்துள்ளார்.

யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டுவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இதற்குமுன் எலோன் மஸ்க்கைக் கடுமையாகச் சாடியதை அடுத்து பைடன் ‘திரெட்ஸ்’ பக்கம் சாய்ந்துள்ளார்.

அதிபர், அதிபரின் மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவரின் கணவர் டக்லஸ் எம்ஹோஃப் ஆகியோருக்கு ‘திரெட்ஸ்’ தளத்தில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. ஆங்கிலத்திலும் ஸ்பானிய மொழியிலும் வெள்ளை மாளிகைக்கும் ‘திரெட்ஸ்’ கணக்கு உள்ளது என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்