மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே

மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே

படம்: தமிழக ஊடகம்

21 Nov 2023 - 8:47 pm

1 mins read

தமிழ்நாடு: செட்டிப்பாளையம் அருகில் தம்பதிகள் பாரம்பரியத்தை காக்க மாட்டுவண்டியில் புதுமனைக்கு திருமணக்கோலத்தில் சென்றது அங்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனந்தகுமார்-பவதாரணி ஆகியோர் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை மாட்டுவண்டியை ஓட்டிவர அருகில் மணப்பெண் மகிழ்ச்சியில் திளைத்தபடி அவர்களது புது இல்லத்துக்கு செல்லும் காணொளியைப் பலர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.

பொதுப் பொறியியல் துறையில் பட்டதாரியான ஆனந்தகுமார், விவசாயத்தின் அத்தியாவசியத்தை இளையதலைமுறையினருக்கு உணர்த்தவே மாட்டுவண்டி சவாரியை தமது திருமணத்தில் மேற்கொண்டதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மாடுதிருமணம்