நியூயார்க்: தத்தெடுப்புக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மனிநேய அமைப்பு ஒன்று 300க்கும் அதிகமான பிராணிகளை தென்அரிசோனாவில் உள்ள மனிதநேய அமைப்பிடம் அனுப்பிவைத்தது.
ஆனால் அந்தப் பிராணிகள் கோல்ட்டன் ஜோன்ஸ் என்ற ஆடவரிடம் அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பாம்பு, உடும்பு போன்ற ஊர்வன விலங்குகளுக்கு உணவுவகைகளை விற்பவர்.
தத்தெடுப்புக்காக அனுப்பப்பட்ட பிராணிகள் ஊர்வன விலங்குகளுக்கு உணவாகி இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
திரு ஜோன்சிடம் அந்தப் பிராணிகளை யார் அனுப்பிவைத்தது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
மோசடிக் குற்றம் நடந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் இதுவரை எவர் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
பிராணிகளுக்கு நடந்த கொடுமை குறித்து சான் டியாகோ, அரிசோனா மனிதநேய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

