சிறைவிடுப்பு கோரும் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ்

சிறைவிடுப்பு கோரும் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ்

1 mins read
4ef20429-55c0-4d1a-8043-8c0c2f7433d4
2017ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆஸ்கார் பிஸ்டோரியசின் கொலைத் தண்டனையை 13 ஆண்டுகள் 5 மாதங்களுக்கு அதிகரித்தது. - படம்: ஏஎஃப்பி

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பாரலிம்பிக் வீரரான ஆஸ்கார் பிஸ்டோரியஸ் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையில் முன்கூட்டியே விடுதலை பெறுவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.

தமது காதலி ரீவா ஸ்டீன்கேம்பைக் கொலைசெய்ததற்காக அவர் 2014ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். பிஸ்டோரியஸ் 2013ஆம் ஆண்டில் காதலர் தினத்தன்று ஸ்டீன்கேம்பைச் சுட்டுக் கொலைசெய்தார்.

முதலில் 2014ஆம் ஆண்டில் நோக்கமில்லா கொலைக் குற்றத்திற்காக ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, பின்னர் கொலைக் குற்றம் நிரூபமணமானதும் 2016ஆம் ஆண்டில் ஆறாண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மிகக் குறைவான தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிய உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டில் ஆஸ்கார் பிஸ்டோரியசின் தண்டனையை 13 ஆண்டுகள் 5 மாதங்களுக்கு அதிகரித்தது.

நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையில் பிஸ்‌டோரியசுக்கு முன்கூட்டியே சிறைவிடுப்பு வழங்குவது குறித்து சிறைவிடுப்பு நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று தென்னாப்பிரிக்காவின் சீர்திருத்தச் சேவைத் துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்