பிரதமர் மோடி: 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன்

பிரதமர் மோடி: 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன்

2 mins read
e1b6cdad-a09e-4dde-ae5d-5330787cc164
திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசித்த பிரதமர் மோடி. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: உலகப் பிரசித்திப்பெற்ற ஆந்திமாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை நவம்பர் 27ஆம் காலை பிரதமர் மோடி தரிசனம் செய்துள்ளார்.

“140 கோடி இந்தியர்களின் நல்ல ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தேன்,” என்று எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதி கோயிலில் வழிபாடு செய்துள்ள புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பிரதமருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் ரேணி குண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கு அவரை ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன், துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் பெ. ராமசந்திராரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர் ரெட்டி, எம்பிக்கள் மிதுன் ரெட்டி, குருமூர்த்தி, ரெட்டப்பா, டிஜிபி ராஜேந்திர நாத், முதன்மை செயலாளர் ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், பிரதமர் மோடி சாலை மார்க்கமாக திருமலை சென்றடைந்தார். இரவு திருமலையில் தங்கிய பிரதமர் மோடி செவ்வாய்க் கிழமை (27-11-23) காலை 8 மணிக்கு திருமலை திருப்பதி கோயிலுக்குச் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு வேத மந்திரங்கள் முழங் பண்டிதர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்ட அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அனைத்து கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு, சூறாவளி பிரச்சாரம் செய்தனர். மத்திய அமைச்சர் அமித் ஷாவும் பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் புதன்கிழமை அன்று தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

குறிப்புச் சொற்கள்