பொருத்தமான ஜோடிகளை இணைத்து வைக்கும் நாடு!

பொருத்தமான ஜோடிகளை இணைத்து வைக்கும் நாடு!

1 mins read
f38b1aac-59a3-4954-9c9b-016ea791ee7a
பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால் பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் அந்நாடு தீவிரம் காட்டி வருகிறது.

தலைநகர் சோலுக்கு அருகில் ஒரு ஹோட்டலில் இதற்காகவே ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் 100 தென்கொரிய ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

தங்களுக்கு ஏற்ற கணவர் அல்லது மனைவியைக் கண்டுபிடிக்க அவர்கள் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.

தென்கொரியாவில் திருமணம், குழந்தை பிறப்பு எண்ணிக்கை சரிந்துள்ளது.

இதைச் சரிசெய்யவே இந்த நிகழ்ச்சிக்கு தென்கொரிய அரசாங்கம் ஏற்பாடு செய்தது.

தென்கொரியாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 0.78 விழுக்காடாகக் குறைந்தது.

ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகள் போதாது என்றும் மேலும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்