நியூயார்க்: 5 வயது சிறுவனுடன் பெற்றோரும் குத்திக்கொலை

1 mins read
168a157d-6876-4ecf-8bf4-56939ba3ccb5
மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொதுமக்கள் அந்தக் குடியிருப்பு கட்டடத்திற்கு வெளியே உள்ள கதவில் பூங்கொத்துகள் வைத்து மரியாதை செய்தனர்.  - படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரான்க்ஸ் பகுதியில் 5 வயது சிறுவனும் அவன் பெற்றோரும் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நடந்தது. நவம்பர் 26ஆம் தேதி தேதி காலை அந்த வீட்டில் அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த மூவரும் மற்றொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாண்ட சிறுவனின் பெயர் கேடென், அவன் தந்தை ஜானத்தன் ரிவேராவுக்கு 38 வயது என்றும் தாய் ஹனோய் பெரால்ட்டாவுக்கு 33 வயது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலை குற்றம் தொடர்பாக சந்தேக நபரின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை. தற்போது அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகனின் மரணத்தை தாங்க முடியாமல் ஜானத்தனின் தந்தை அந்தக் குடியிருப்பு கட்டடத்திற்கு வெளியே கதறி அழுதார்.

மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொதுமக்கள் அந்தக் குடியிருப்பு கட்டடத்திற்கு வெளியே உள்ள கதவில் பூங்கொத்துகள் வைத்து மரியாதை செய்தனர். சிலர் குழந்தைகளுக்குப் பிடித்த கேலிச்சித்திரங்களின் படம் கொண்ட ‘பலூன்களை” கதவில் கட்டினர்.

சிறுவன் கேடெனின் நண்பர்கள் அட்டைகளில் சில அன்பான வார்த்தைகளை எழுதி கதவின் ஓரம் வைத்தது அங்கிருந்தவர்களின் மனதை உருக்கியது.

கேடெனின் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள், எளிமையாக மற்றவர்களிடம் பழகக் கூடியவர்கள் என்று அக்கம்பக்கத்தினர் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்