பயன்படுத்தப்படாத கூகல் கணக்குகள் அழிக்கப்படும்

பயன்படுத்தப்படாத கூகல் கணக்குகள் அழிக்கப்படும்

1 mins read
0633e2a2-4418-4e0b-8709-0e0866ee5351
இவ்வாண்டிறுதி முதல் பயன்படுத்தப்படாத கணக்குகள் அழிக்கப்படும் என்று கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சான் பிரான்சிஸ்கோ: அதிக காலம் பயன்படுத்தப்படாத கூகல் கணக்குகள் இந்த வாரம் முதல் அழிக்கப்படவுள்ளன.

டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனால், பயன்படுத்தாமல் இருக்கும் கூகல் கணக்குகள் அழிக்கப்படாமல் இருக்க அவற்றைப் பயன்படுத்துமாறு பயனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கூகல் கணக்குகள் அழிக்கப்படும் என்று அந்நிறுவனம் இவ்வாண்டு மே மாதம் அறிவித்தது. டிசம்பர் மாதம் முதல் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூகல் தெரிவித்தது.

அதன்படி ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் மட்டுமின்றி யூடியூப், கூகல் ஃபோட்டோஸ், கூகல் மீட், காலண்டர் ஆகியவற்றின் பயன்படுத்தப்படாத கணக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் பதிவுகளும் அழிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்