தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் ஆகச் செலவுமிக்க நகரமானது சிங்கப்பூர்

1 mins read
83081d6a-da44-4c86-a4bb-663126722602
சிங்கப்பூரும் ஸூரிக்கும் ஆகச் செலவுமிக்க நகரங்களாக பட்டியலின் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங்காங்: உலகின் ஆகச் செலவுமிக்க நகரங்களில் சிங்கப்பூரும் சுவிட்சர்லாந்தின் ஸூரிக்கும் பட்டியலின் முதல் இடத்தில் வந்துள்ளன.

ஜெனிவா, நியூயார்க், ஹாங்காங் ஆகியவை பட்டியலின் அடுத்த மூன்று இடங்களைப் பிடித்துள்ளதாகப் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு (இஐயு) நவம்பர் 30ஆம் தேதியன்று தெரிவித்தது.

அடிக்கடி நாடப்படும் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் ஆண்டு அடிப்படையில் சராசரியாக 7.4% உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த உயர்வு என்றும் இல்லாத அளவுக்கு 8.1% இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அந்த உயர்வு சற்று குறைவே. இருப்பினும், 2017ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் காணப்பட்ட போக்கைக் காட்டிலும் இது கணிசமான ஓர் அதிகரிப்பு என்று அதன் அறிக்கையில் இஐயு சுட்டியது.

உலகிலேயே ஆக அதிகமான போக்குவரத்துக் கட்டணங்களுடைய நாடாக சிங்கப்பூர் விளங்குவதுடன் ஆக விலை அதிகமான ஆடைகள், மளிகைப் பொருள்கள், மதுபானம் விற்கப்படும் நகரங்களில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்