டெல் அவிவ்: அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கான திட்டம் பற்றி இஸ்ரேலிய அதிகாரிகள் ஓராண்டுக்கு முன்னரே அறிந்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், அத்தாக்குதலை அரங்கேற்ற ஹமாஸுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என எண்ணிய இஸ்ரேலிய ராணுவமும் உளவுத்துறை அதிகாரிகளும் அதைப் பெரிதாகக் கருதவில்லை.
‘ஜெரிகோ வால்’ என இஸ்ரேலிய அதிகாரிகள் பெயரிட்ட 40 பக்கங்கள் கொண்ட ஆவணம் ஒன்று, பெருத்த சேதத்தைப் ஏற்படுத்துவதற்கான குறிப்புகளைப் பட்டியலிட்டது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவோ உயர்மட்ட அரசியல் தலைவர்களோ அந்த ஆவணத்தைப் பார்த்தனரா என்பது பற்றித் தெரியவில்லை.
ஹமாஸின் திட்டம் குறித்த எச்சரிக்கையை இஸ்ரேலிய ராணுவம் கடுமையானதாக எடுத்திருந்தால், அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸின் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்திருக்கலாம் என்பதை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டனர்.