நியூசிலாந்துப் பள்ளிகளில் கைப்பேசிகளுக்குத் தடை

1 mins read
24bb0959-cc28-4a96-804b-f7d69b9bd097
மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த இந்த நடவடிக்கை உதவும் என்றார் நியூசிலாந்துப் பிரதமர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்துப் பள்ளிகளில் கைப்பேசிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று பிரதமர் கிறிஸ்தஃபர் லுக்ஸன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மாணவர்களிடையே குறைந்துவரும் எழுத்தறிவு விகிதத்தை எதிர்கொள்ள அரசாங்கம் முனைகிறது.

ஒருகாலத்தில் உலகிலேயே ஆகச் சிறந்த எழுத்தறிவு விகிதத்தை நியூசிலாந்துப் பள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால், வகுப்பறைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அஞ்சும் அளவுக்கு எழுத்தறிவு நிலை சரிந்துள்ளது.

தாம் பிரதமர் பதவியை ஏற்ற 100 நாள்களுக்குள் பள்ளிகளில் கைப்பேசிகளுக்குத் தடை விதிக்கப் போவதாக திரு லுக்ஸன் முன்னதாகக் கூறியிருந்தார்.

மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த இந்த நடவடிக்கை உதவும் என்றார் அவர்.

“மாணவர்கள் கற்கவும் ஆசிரியர்கள் கற்பிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்