மலேசியாவில் 1 பில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய் உள்ள கிணறுகள் கண்டுபிடிப்பு

1 mins read
b1901109-0800-4fe2-a5bc-e8aef9d7f60f
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் கட்டடம். - படம்: புளூம்பெர்க்

கோலாலம்பூர்:  மலேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸும் அதன் எண்ணெய் எடுக்கும் குத்தகைக்காரர்களும் எண்ணெய் வளம் உள்ள 19 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், எண்ணெய் இருப்புக்கு சாத்தியமான இரண்டு இடங்களையும் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இரண்டும் சேர்ந்து 2023ஆம் ஆண்டு ஒரு பில்லியன் பீப்பாய்க்கும் அதிகமான அளவு வளத்தை நாட்டுக்கு அளித்துள்ளதாக பெட்ரோனாஸ் நிறுவனம் விளக்கமளித்து உள்ளது.

இந்த சாதனை கடந்த சில ஆண்டுகளாக எண்ணெய்க்காக தீவிரமாக தோண்டும் திட்டத்தினால் ஏற்பட்டது என்று பெட்ரோனாஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இத்திட்டத்தின்படி, 25 எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டதாக பெட்ரோனாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இது 2015ஆம் ஆண்டுக்குப் பின் தோண்டப்பட்ட ஆக அதிகமான எண்ணெய்க் கிணறுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்