சாண்டா மோனிகா: கலிஃபோர்னியா முன்னாள் ஆளுநரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இஸ்ரேலில் ஹமாஸ் படையினரால் பிணை பிடிக்கப்பட்ட மூவரின் உறவினர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு மேற்கே சாண்டா மோனிகாவில் உள்ள காணொளித் தயாரிப்பு நிறுவனத்தில் வெண்கலக் கழுகுச் சிற்பங்களை அந்த உறவினர்களிடம் ஸ்வார்ஸ்னேக்கர் வழங்கினார்.
“யூத மக்கள், இஸ்ரேலின் பெரிய நண்பர்” என தம்மை வர்ணித்த அவர், பிணைக்கைதிகளாக உள்ளோரைக் கைவிட வேண்டாம் என்ற செய்தியைப் பரப்ப தாம் விரும்புவதாகக் கூறினார்.
“இங்குதான் எனது பங்களிப்பு வருகிறது. நான் நன்கு அறியப்பட்டவராக இருப்பதால், ஏராளமானோரிடம் செய்தி கொண்டுசேர்க்க எனக்கு ஒருவகை சக்தி உள்ளது,” என்றார் முன்னாள் ஹாலிவுட் பிரபலமான ஸ்வார்ஸ்னேக்கர்.