குண்டுவெடிப்பு சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை

குண்டுவெடிப்பு சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை

2 mins read
b28db28a-4bfe-4f7c-b571-f19fb816d69b
பிலிப்பீன்சின் மின்டானோ மாநிலத்தில் உள்ள மராவி பல்கலைக்கழகத்தின் உடலுறுதி பயிற்சிக் கூடத்தின் மைய நுழைவாயிலில் காவல் துறையினர் அங்கு காவல் ஆய்வாளர்கள் தடயங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வேளையில் காவல் காக்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்சில் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பிரர்த்தனை ஒன்றுகூடலின்போது குண்டுவெடிப்பு ஏற்பட்டு நால்வர் கொல்லப்பட்டனர்.

இந்தக் குண்டுவெடிப்புக்கு காரணமான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை தேடும் மிகப் பெரிய வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் டிசம்பர் 4ஆம் தேதி கூறினார்.

சிரியா, ஈராக் நாடுகளில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் இயக்கம் இந்த குண்டுவெடிப்புக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறியுள்ள நிலையில், அந்த இயக்கத்தின் இரு சந்தேக நபர்களை காவல் துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போது குண்டுவெடிப்புக்கு காரணமாக சந்தேக நபர்களை பிடிக்க மிகப் பெரிய அளவிலான தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,” என மின்டானோ மாநில மேற்குப் பகுதி தளபதி லெஃப்டினண்ட் -ஜெனரல் வில்லியன் கொன்ஸாலேஸ் மராவியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மின்டானோ மாநில மராவி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் உடலுறுதிப் பயிற்சிக் கூடத்தில் டிசம்பர் 3ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இந்த நகரம் 2017ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் போாளிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆசியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் செயலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் போராாளிகளை முறியடித்து மராவி நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர பிலிப்பீன்ஸ் ராணுவத்திற்கு ஐந்து மாதங்கள் பிடித்தது. இதன் காரணமாக மராவி நகரம் பெரும் சேதத்திற்கு உள்ளானது.

“சிலரின் பெயர்கள் எங்களிடம் உள்ளன. ஆனால், விசாரணை இன்னும் தொடர்கிறது. விசாரணையை தடுக்க விரும்பாததால் அவர்களின் பெயர்களை தெரிவிக்க இயலாது,” என்று அந்த வட்டார காவல் துறை தலைமை அதிகாரி பிரிகேடியர்-ஜெனரல் ஆலன் நொப்லேஸா ஜிஎம்ஏ ஊடகத்திடம் விளக்கினார்.

இதற்கிடையே, இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது. அது, ஜப்பான், ஆ:ஸதிரேலியா, பிரிட்டன், சீனா, கனடா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து வன்முறையைத் தான் எதிர்ப்பதாகவும் பிலிப்பீன்ஸ் மக்களுக்கு தான் பக்க பலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புக்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளே காரணம் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் மார்க்கோஸ் கூறிய சிறிது நேரத்தில் அதற்குக் காரணம் தான் என்று ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் இயக்கம் கூறியது.

கத்தோலிக்க கிறிஸ்துவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிலிப்பீன்சில் மராவி முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாக உள்ள பகுதி. அந்நாட்டு அரசாங்கம் அங்கு பல காலமாக சட்டம், ஒழுங்கு சீர்கேடு, பிரிவினைவாத வன்முறை, குலவழிச் சங்கங்கங்களுக்கு இடையேயான போராட்டம், ஆகிய பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வந்துள்ளது.

இதனால், அந்த இடம், பயங்கரவாதம் பரவக்கூடிய இடமாக மாறிவிடுமோ என்ற அச்சம் பலரிடம் நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்