போலந்து -உக்ரேன் புதிய எல்லைக் கடப்பில் லாரிகள் முதல் பயணம்

கிய்வ்: உக்ரேன்-போலந்து எல்லையில் புதிதாக திறக்கப்பட்ட உஹ்ரினிவ்-டோல்ஹோபிச்சுவ் பாதை வழியாக முதல் 30 காலி லாரிகள் திங்கட்கிழமை அதிகாலையில் சென்றன. இது போலந்து ஓட்டுநர்களின் எதிர்ப்புக்கிடையே, முக்கிய தரை வழித்தடங்களைத் திறக்கும் என்று நம்புவதாக என்று உக்ரேனின் எல்லை சேவை திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

உக்ரேனிய சகாக்களிடமிருந்து நியாயமற்ற போட்டி எதிர்கொள்வதாகக் கருதும் போலந்து டிரக் வாகன ஓட்டுநர்கள் நவம்பர் 6 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது நான்கு எல்லைக் கடப்புகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

அவர்களின் முக்கிய கோரிக்கை உக்ரேனிய டிரக் ஓட்டுநர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான உரிமம் தேவையற்ற அனுமதியை நிறுத்த வேண்டும், இது சாத்தியமற்றது என்று கியவும் பிரஸ்ஸல்சும் கூறுகின்றன. காலி போலந்து லாரிகளை எல்லைக்கு அப்பால் உரிமமின்றி அனுப்புவது கோரிக்கைகளில் ஒன்றாகும்.

காலி லாரிகளுக்காக திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணிக்கு எல்லை திறக்கப்பட்டது.

முற்றுகையிடப்பட்டுள்ள எல்லைக் கடப்புகளில் அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய சில நடவடிக்கைகளை போலந்துடன் கடந்த வாரம் ஒப்புக்கொண்டதாக உக்ரேன் கூறியது, ஆனால் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள் இன்னும் விவாதிக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!