காத்மாண்டு: ரஷ்யா, நேப்பாள மக்களை அதன் ராணுவத்தில் சேர்க்கக்கூடாது என்று நேப்பாள அரசாங்கம் மாஸ்கோவைக் கேட்டுக்கொண்டது.
அதேபோல் தற்போது ரஷ்ய ராணுவத்தில் உள்ள நேப்பாள ராணுவ வீரர்களை உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
அண்மையில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய போது ஆறு நேப்பாள வீரர்கள் கொல்லப்படடனர். அதைத்தொடர்ந்து நேப்பாள அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் போர் நடக்கும் நாடுகளில் நேப்பாள ராணுவ வீரர்கள் சேவை செய்யக்கூடாது என்றும் அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
ரஷ்ய ராணுவத்தில் 150 முதல் 200 நேப்பாள ராணுவ வீரர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
நேப்பாள ராணுவ வீரர்கள் கூர்க்கா என்று அழைப்படுகிறார்கள். அவர்களின் வீரம், சிறப்பான சண்டைப் பயிற்சிகளைக் கருத்தில் கொண்டு 1947ஆம் ஆண்டு முதல் பிரிட்டன், இந்திய ராணுவங்களில் பணியாற்ற அந்நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டன.
இருப்பினும் ரஷ்யாவுடன் நேப்பாள ராணுவ வீரர்கள் தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை. ரஷ்யா 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது போர் தொடுத்து வருகிறது.