மூட்டைப்பூச்சி மோசடி: இருவர் கைது

மூட்டைப்பூச்சி மோசடி: இருவர் கைது

படம்: ராய்ட்டர்ஸ்

08 Dec 2023 - 10:08 pm

1 mins read

பாரிஸ்: பிரான்சில் முதியோரிடம் மூட்டைப் பூச்சி சிகிச்சை என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான யூரோக்களை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று, போலியான கட்டுப்பாட்டு சேவைகளை மேற்கொள்வார்கள். பின்னர் சிகிச்சை தயாரிப்புகளுக்கு வீட்டிலுள்ளவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் என்று காவல்துறையினர் கூறினார்.

மொத்தம் 48 பேர் மோசடி செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பலர் 90 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என்றும் ஸ்ட்ராஸ்பேர்க் காவல்துறை தெரிவித்தது.

அண்மைய மாதங்களில் நாடு முழுவதும் மூட்டைப்பூச்சிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

நாடு முழுவதும் பெரும் பிரச்சினையாக உள்ள மூட்டைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்