தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்தடையால் இருளில் மூழ்கிய இலங்கை

1 mins read
39cf4000-7d93-471f-a6e5-538d7b635439
மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாற்றால் மின்தடை ஏற்பட்டதாக இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: இலங்கையில் டிசம்பர் 9ஆம் தேதி, நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடையால் அந்நாடே இருளில் மூழ்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு அதற்குக் காரணம் என்று இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் மெதுவாக வழக்க நிலைக்குத் திரும்புவதாக உள்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. சிலோன் மின்வாரியத்தை மேற்கோள்காட்டி அவை அந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்