தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100 மில்லியன் ஆண்டுப் பழமையான கடல் ராட்சத விலங்கு மண்டை ஓடு கண்டுபிடிப்பு

1 mins read
1e364fc5-2fc9-4bb7-b735-6b13cb218ea3
இந்த ராட்சத கடல் மிருகத்துக்கு 130 கூர்மையான, நீளப் பற்கள் உள்ளன. - படம்: பிபிசி

கடலில் கிட்டத்தட்ட 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு வகை ராட்சத கடல் விலங்கின் இரண்டு மீட்டர் நீளமுள்ள மண்டை ஓடு தென் இங்கிலாந்தின் ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் பராமரிப்பில் உள்ள ஜூராசிக் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

‘பிலியசோர்’ என்ற பெயர் கொண்ட இதுபோன்ற ராட்சத விலங்கின் எச்சம் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

இது பற்றிய சிறப்பு தொலைக்காட்சியை பிரபல படைப்பாளரான சர் டேவிட் அட்டன்பரோ புத்தாண்டு நாளில் படைப்பார் என்று பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வகை கடல் விலங்குகளுக்கு வலுவான தாடைகள், பெரிய பற்களுடன் கட்டையான கழுத்துப் பகுதி இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்