3க்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்குச் சலுகை

3க்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்குச் சலுகை

1 mins read
772c3bae-370d-45d4-9982-15aa37499b38
ஜப்பானிய அரசாங்கம் இந்த முயற்சியை குழந்தைகளின் எதிர்கால உத்திக் கொள்கை தொகுப்பில் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

தோக்கியோ: ஜப்பானில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகக் கல்வியை இலவசமாக வழங்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜப்பானிய ஊடகங்கள் டிசம்பர் 7ஆம் தேதி அந்தத் தகவலை வெளியிட்டன.

பிறப்பு விகிதம் குறைந்துவரும் வேளையில் அதைத் தடுக்க அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது.

வரும் 2025 நிதியாண்டிலிருந்து இந்தத் திட்டம் நடப்புக்கு வரும். இதற்குக் குடும்ப வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குடும்பங்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுகொள்ள ஊக்குவிப்பதும் குழந்தைகளின் கல்விச் செலவுச் சுமையைக் குறைப்பதும் இதன் நோக்கங்கள் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்