அதிக அளவில் போதைமிகு அபின் உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ள மியன்மார்

1 mins read
ab59b8d9-4fde-4d8b-a5f0-068ac8592b1c
போதை மிகு அபின் செடிகள் ‌‌‌ஷான், சின், கச்சின் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: உலகில் அதிக அளவில் போதை மிகு அபினை உற்பத்தி செய்யும் நாடாக மியன்மார் மாறியுள்ளதாக ஐக்கியநாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அந்த இடத்தில் ஆஃப்கானிஸ்தான் இருந்தது.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசாங்கம் போதைப்பொருள்களைத் தடை செய்துள்ளது. அதனால் ஆஃப்கானிஸ்தானில் போதைமிகு அபின் உற்பத்தி செய்யப்படும் அளவு 95% குறைந்துள்ளது.

மியன்மாரில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. மக்கள் வாழ்வாதாரத்திற்காக போதைமிகு அபின் செடியை வளர்க்கத் தொடங்கினர்.

ஒரு கிலோ போதை மிகு அபின் செடி பூக்கள் 476 வெள்ளி வரை விலைபோவதாகக் கூறப்படுகிறது. அதனால் அச்செடிகளை வளர்க்கும் நிலப்பரப்பும் அதிகரித்து வருவதாக ஐக்கியநாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

போதை மிகு அபின் செடிகள் ‌‌‌மியன்மாரின் ஷான், சின், கச்சின் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்