தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானிய அமைச்சரவையில் பெரும் மாற்றம்

1 mins read
bfd2e814-b1e0-412f-8eee-da1c3c3bdce6
நிதி மோசடியால் மக்களிடம் அவநம்பிக்கை ஏற்படாதிருக்க ஜப்பானியப் பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தமது அமைச்சரவையில் புதன்கிழமை (டிசம்பர் 13) பெரிய மாற்றங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜப்பானின் வரலாற்றில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஆகப்பெரிய நிதி மோசடியைத் தொடர்ந்து மக்களின் செல்வாக்கை மீட்டெடுக்க அவர் அந்த நடவடிக்கையை மேற்கொள்வார் என்று ஊடகங்கள் குறிப்பிட்டன.

அரசாங்கத்தின் முக்கிய பதவிப் பொறுப்புகளை வைத்துள்ள தலைமை அமைச்சர் ஹிரோகாஸு மட்சுனோ, நீக்கப்பட இருப்போரில் முக்கியமானவர் என்று கூட்டணி அரசாங்கத்தின் தலைவரான நட்சுவோ யாமகுச்சி தெரிவித்தார்.

முக்கிய கேபினட் அமைச்சர்களும், பல துணை அமைச்சர்களும் பதவி இழப்பார்கள் என்று ஜப்பானின் உள்ளூர் ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன.

பல்லாயிரம் டாலர் நிதி திரட்டப்பட்ட நடவடிக்கை தொடர்பான முக்கிய தகவல்கள் கட்சியின் அதிகாரத்துவக் கணக்குகளில் இருந்து மாயமாகி உள்ளனவா என்பது பற்றி அரசுத் தரப்பு சட்டத்துறை அதிகாரிகள் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நிதித் திரட்டு நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் தொடர்புகளையும் அவர்கள் விசாரிப்பர்.

குறிப்புச் சொற்கள்