குண்டாக இருப்போரையும் ராணுவத்தில் சேர்க்க தென்கொரியா விருப்பம்

1 mins read
bb5b3ef5-72d0-4706-a1e8-d89b2bc97f95
உடல் மெலிந்தோரையும் பருமனானோரையும் சேர்க்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்கிறது தென்கொரிய தற்காப்பு அமைச்சு. - படம்: இபிஏ

சோல்: கட்டாய ராணுவச் சேவையில், அதிக உடல் பருமன் உள்ளோருக்கு அளிக்கப்பட்டு வந்த விதிவிலக்கைக் கைவிட தென்கொரிய ராணுவம் தீர்மானித்து உள்ளது.

விதிவிலக்கிற்கான அளவுகோலை திருத்தப்போவதாக தென்கொரிய தற்காப்பு அமைச்சு டிசம்பர் 14ஆம் தேதி அறிவித்தது.

கடுமையான உடல் பருமன் உள்ளோரையும் கட்டாய ராணுவச் சேவையில் சேர்க்க அனுமதிக்கும் வகையில் அந்தத் திருத்தத்தை அது மேற்கொள்ள உள்ளது.

அதற்கேற்ற வகையில், தற்போதைய குறைந்தபட்ச உடல்நிறைக் குறியீடு (பிஎம்ஐ) 16 என்பதை 15க்கும் அதிகபட்ச குறியீட்டை 35லிருந்து 40க்கும் மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

துடிப்பான வீரர்களாகச் செயல்பட ராணுவத்தில் சேரும் உடல் மெலிந்தோர் மற்றும் உடல் பருமன் உள்ளோரின் எண்ணிக்கை இதன் மூலம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்