கிம் ஜோங் உன்னுக்கு கடுமையான எச்சரிக்கை

கிம் ஜோங் உன்னுக்கு கடுமையான எச்சரிக்கை

1 mins read
e3c92d53-f272-4033-b210-f99b7dbdb88e
வடகொரியாத் தலைவர் கிம் ஜோங் உன் - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: அமெரிக்கா மீது வடகொரியா அணுவாயுத தாக்குதல் ஏதேனும் நடத்த திட்டமிட்டால் கிம் ஜோங் உன்னின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து இந்த கூட்டறிக்கையை சனிக்கிழமை அன்று வெளியிட்டன. கூட்டறிக்கையில் தென்கொரியாமீது வடகொரியா தாக்குதல் நடத்த எண்ணினால் விரைவாக, பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதமும் இதே போன்ற எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணுவாயுத சோதனைகளையும் தயாரிப்புகளையும் வடகொரியாவில் தவிர்க்க முடியாது என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அணுவாயுதங்கள் முக்கியமான ஒன்று என்றும் 2022ஆம் ஆண்டு பியோங்யாங் தெரிவித்தது.

அண்மையில் வடகொரியா உளவு பார்க்கும் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. இது அமெரிக்காவை மேலும் சீனமூட்டியது.

குறிப்புச் சொற்கள்
கிம் ஜோங் உன்அமெரிக்காவடகொரியா