விலை உயர்வால் வீட்டிலேயே மிளகாய் வளர்க்கும் இந்தோனீசிய மக்கள்

விலை உயர்வால் வீட்டிலேயே மிளகாய் வளர்க்கும் இந்தோனீசிய மக்கள்

1 mins read
5d96897f-436f-41d9-94d5-4c1f1f640c74
இந்தோனீசிய மக்கள் பலர் தங்களது வீடுகளிலேயே மிளகாய் வளர்க்கத் தொடங்கிவிட்டனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜக்கார்த்தா: இந்தோனீசிய மக்கள் காரசாரமான உணவுகளை உண்ண விருப்பப்படுவார்கள். அதனால் அவர்களின் உணவுகளில் மிளகாய்கள் அதிகம் இருக்கும்.

ஆனால் தற்போது அந்நாட்டில் வறட்சியின் காரணமாக மிளகாய் சாகுபடிகள் குறைந்துள்ளன. அதனால் உள்ளூர் சந்தைகளில் மிளகாய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஒரு கிலோகிராம் மிளகாய் 8.60 வெள்ளிக்கு மேல் விற்கப்படுகிறது.

விலை அதிகமாக இருப்பதால் இந்தோனீசிய மக்கள் பலர் தங்களது வீடுகளிலேயே மிளகாய் வளர்க்கத் தொடங்கிவிட்டனர். மாடிகள், வீட்டின் பின்புறம் உள்ள தோட்டம் ஆகியவற்றில் அவர்கள் மிளகாய் வளர்க்கின்றனர்.

சிறிய அளவில் மிளகாய் வளர்ப்பதால் அவ்வளவு கடினமாக இல்லை என்றும் விலை குறையும் வரை வீட்டிலேயே மிளகாய் வளர்க்கவுள்ளதாக இந்தோனீசிய மக்கள் தெரிவித்துள்ளனர். மிளகாய் விலை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்