10,000 ஆண்டு செயல்படும் அதிசய கடிகாரம்

10,000 ஆண்டு செயல்படும் அதிசய கடிகாரம்

1 mins read
24102c60-2982-4b0b-af35-8a03e4afac39
பெரும் பணக்காரர் ஜெஃப் பெசோஸ் (இடது), அதிசய கடிகாரம். - படங்கள்: இணையம்
Google News Preferred Icon

அமெரிக்கா: உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், அதிசய கடிகாரம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் $42 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளார்.

அந்தக் கடிகாரம் 10,000 ஆண்டுகள் செயல்படக்கூடியது. ஆண்டுக்கு ஒருமுறைதான் ‘டிக்’ ஒலி எழுப்பும்; நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மணி அடிக்கும்; ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘குக்கூ’ எனப் பாடும். ‘ஃபாக்ஸ்நியூஸ்’ அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

கணினி அறிவியலாளர் டேனி ஹில்லிஸ் வடிவமைக்கும் அந்தக் கடிகாரம், அறிவியல், கலை இரண்டின் சங்கமத்தில் உருவாகும் அதிசயமாக விளங்கும் என்று கருதப்படுகிறது.

500 அடி உயரமுள்ள அக்கடிகாரம் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஒரு மலைமேல் அமைக்கப்படுகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு அது துல்லியமான காலத்தைக் காட்டும் என்று கூறப்படுகிறது.

அந்த அதிசய கடிகாரத்தை அதிகம் பராமரிக்கத் தேவையில்லை. சூரிய ஒளியிலிருந்தும் வருகையாளர்களிடமிருந்தும் பெறப்படும் இயந்திர ஆற்றலைக் கொண்டு அது செயல்படும்.

அடுத்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு, அன்றாடம் ஒருமுறை அது தனிப்பட்ட ஒலி எழுப்புவதற்காக 3.5 மில்லியன் மணி ஒலிகளை உருவாக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது.

அதிசய கடிகாரத்தைப் பார்வையிட அனுமதி இலவசம். அதிகாலையில் தொடங்கினால்தான் அன்றைய நாள் முடிவதற்குள் அதைப் பார்த்து முடிக்க இயலும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்