அர்ஜென்டினா மற்றும் உருகுவேயில் ஏற்பட்ட கடும் புயலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 16க்கு உயர்ந்தது

1 mins read
74494080-f382-4747-b60a-e73b32004663
புயல் காற்றால் தலைநகர் பியூநொஸ் அயர்ஸ் முழுவதும் மரங்கள் மற்றும் விளக்கு கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. - படம்: ராய்ட்டர்ஸ் 

பியூனஸ் அய்ரஸ்: வார இறுதியில் அர்ஜெண்டினாவையும் அண்டை நாடான உருகுவேயையும் தாக்கிய கடுமையான புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 க்கு உயர்ந்தது.

உருகுவேயின் வானிலை ஆய்வு நிலையம், டிசம்பர் 17 அதிகாலை தென்கிழக்கிலிருந்து பலத்த காற்று வீசியதால் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அர்ஜெண்டினாவில் டிசம்பர் 17ஆம் தேதியில் மொரேனோ நகரில் ஒரு பெண், மரக்கிளை சாய்ந்து இறந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

மேலும் பதின்மூன்று பேர் டிசம்பர் 16 ஆம் தேதியில் பஹியா பிளாங்கா நகரில் புயலால் மாண்டனர்.

அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலெய் டிசம்பர் 17ஆம் தேதி அன்று விபத்து நடந்த இடத்திற்குச் சென்றார்.

புயலின் பலத்த காற்றினால் தலைநகர் பியூநொஸ் அயர்ஸ் முழுவதும் மரங்கள் மற்றும் விளக்குக் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன.

குறிப்புச் சொற்கள்
புயல்உயிரிழப்புஉலகம்

தொடர்புடைய செய்திகள்