குவைத் பட்டத்து இளவரசர்: நாட்டு நலன் குறித்து முழுமையான ஆய்வு தேவை

குவைத் பட்டத்து இளவரசர்: நாட்டு நலன் குறித்து முழுமையான ஆய்வு தேவை

1 mins read
31185df5-9757-491d-98d3-30792ecfe7d8
குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் மேஷால் அல்-அகமது அல்-ஜபார் அல்-சபா - படம்: ராய்ட்டர்ஸ் கோப்புப் படம்
Google News Preferred Icon

குவைத்: குவைத்தின் புதிய பட்டத்து இளவரசராக புதன்கிழமையன்று பதவியேற்ற ஷேக் மேஷால் அல்-அகமது அல்-ஜபார் அல்-சபா தனது முதல் உரையில் நாட்டு நலன், மக்கள் நலன் குறித்துப் பேசினார்.

அந்த உரையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாக அதிகாாரிகளை கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளார்.

நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், தனது பதவிக்கான உறுதிமொழிக்குப் பின் ஆற்றிய உரையில், நீதி, நேர்மைக்கு அடிகோலும் விதிமுறைகளைக்கு சற்றும் தொடர்பில்லாத முறையில் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பதாக சாடினார்.

அத்துடன், குவைத்தின் அடையாளத்தை பாதிக்கும் வகையில் பல குற்றவாளிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் மன்னிக்கப்படுவதற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பட்டத்து இளவரசர், தற்போதைய எதார்த்த நிலையை அதுவும் குறிப்பாக, பாதுகாப்பு, பொருளியல், மக்களின் வாழ்க்கைத் தரம் போன்ற அம்சங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் என்று விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்