நடிகர் வின் டீசல் மீது பாலியல் குற்றச்சாட்டு

1 mins read
da5c0ae0-184c-44d5-b1cb-3f84cfaa6eb0
ஹாலிவுட் நடிகர் வின் டீசல். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது லாஸ் ஏஞ்சலிஸ் நீதிமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ‘பாஸ்ட் ஃபைவ்’ பட வேலையில் ஈடுபடும் போது தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வின் டீசலின் முன்னாள் உதவியாளர் ஆஸ்டா ஜொனாசன் வியாழக்கிழமை அன்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

அச்சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரத்திலேயே தாம் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக ஆஸ்டா தெரிவித்தார். துன்புறுத்தல் சம்பவம் அட்லாண்டாவில் உள்ள ஹோட்டலில் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குற்றச்சாட்டு குறித்து வின் டீசல் தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஹாலிவுட் நடிகர்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் வின் டீசல், அவருக்கு எதிராக புகார் கொடுத்தால் திரைத்துறையில் ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் இவ்வளவு ஆண்டுகளாக அமைதியாக இருந்ததாக ஆஸ்டா கூறினார்.

2017ஆம் ஆண்டு முதல் பொழுதுபோக்குத்துறையில் வேலை செய்துவந்த பல பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வெளிப்படையாக புகார் கொடுக்கத் தொடங்கினர். அதில் பல நட்சத்திரங்களின் பெயர்கள் அடிப்பட்டன, சிலர் சிறைக்கும் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்