விலை நிர்ணய மோசடி; ஐந்து நிறுவனங்களுக்கு 415 மில்லியன் ரிங்கிட் அபராதம்

விலை நிர்ணய மோசடி; ஐந்து நிறுவனங்களுக்கு 415 மில்லியன் ரிங்கிட் அபராதம்

1 mins read
4031e847-fa29-4a0a-9a25-e91b94104afb
படம்: - பிக்சாபே
Google News Preferred Icon

கோலாலம்பூர்: கோழிகளுக்கான இரை விலையை நிர்ணயம் செய்வதில் மோசடி செய்ததாக ஐந்து மலேசிய நிறுவனங்களுக்கு 415 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை மலேசிய போட்டித்தன்மை ஆணையம் வெளியிட்டது.

ஒரு கும்பலாக செயல்பட்டு சந்தையில் ஒரு பொருளின் விலையை நிர்ணயம் செய்தது போட்டித்தன்மை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று ஆணையத்தின் தலைவர் இஸ்கந்தார் இஸ்மாயில் தெரிவித்தார்.

டின்டிங்க்ஸ் பொல்ட்ரி டிவெலப்மன்ட் செண்டர் நிறுவனத்துக்கு 70 மில்லியன் ரிங்கிட், எஃப் எஃப் எம் பெர்ஹாத் நிறுவனத்துக்கு 42 மில்லியன் ரிங்கிட், கோல்ட் காய்ன் பீட்மில்ஸ் நிறுவனத்திற்கு 97 மில்லியன், லியோங் ஹப் பீட்மில் மலேசியா நிறுவனத்துக்கு 157 மில்லியன் ரிங்கிட், பிகே ஆக்ரோ இந்தஸ்டிரியல் நிறுவனத்துக்கு 47 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கும்பல் போக்கு போட்டித்தண்மைக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். அதனால் தான் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போட்டித்தண்மையில் இதுபோன்று தவறுகள் நடந்தால் அது பொருளியலுக்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் இஸ்கந்தார் இஸ்மாயில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியா