ஆயுத விற்பனை: சவூதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் அமெரிக்கா

வா‌ஷிங்டன்: சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்களை விற்கக்கூடாது என்று விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் சிலவற்றை அமெரிக்கா நீக்கவுள்ளதாக வியாழக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்கள் விற்கக்கூடாது என்று தடைவிதித்தார்.

ஏமனில் உள்ள பொதுமக்கள் மீது அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு சவூதி அரேபியா தாக்குதல் நடத்துவதாகவும் சவூதியின் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானதாகவும் திரு பைடன் குற்றஞ்சாட்டினார்.

தற்போது ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகளுடன் சவூதி அரேபியா அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு மன்றம் தகவல் தர மறுத்துவிட்டது.

தடை எப்போது விலக்கப்படும் என்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

சவூதி அரேபியாவுக்கு தெற்கில் உள்ளது செங்கடல். அதன் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல் நடத்துவதால் அது உலக அளவில் வர்த்தகத்திற்கு தலைவலியாக உள்ளது.

இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கூறி செங்கடலில் வரும் கப்பல்களைத் தாக்குவதாக காரணம் சொல்கிறது ஹவுத்தி படை.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஹவுத்தி படைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே சண்டை நீடிக்கிறது. இதில் இரு தரப்பும் சண்டை நடக்கும் போது மனிதாபிமான சட்டங்களை மீறினவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

சண்டையை நிறுத்திவிட்டு பொருளியல் முதலீடுகள் மீது சவூதி அரேபியா அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சவூதி மீதான ஆயுத தடையை அமெரிக்கா நீக்கிவிட்டால் வா‌ஷிங்டனிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்கும் நாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா மீண்டும் இடம்பிடிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!