ரஷ்ய சொத்துகளைப் பறித்து உக்ரேனுக்குக் கொடுக்க முயற்சி

ரஷ்ய சொத்துகளைப் பறித்து உக்ரேனுக்குக் கொடுக்க முயற்சி

1 mins read
549f9e46-151d-4cd4-8037-1cbe4941ae0a
நிதி ஆதரவு குறைவதால் உக்ரேனுக்கு உதவ அமெரிக்கா முயன்று வருகிறது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: மேற்கத்திய நாடுகளில் ரஷ்யாவின் மத்திய வங்கி வைத்துள்ள US$300 பில்லியனுக்கு (S$398 பில்லியன்) மேற்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் ஆதரவுக்கான சைகையைக் காட்டி வருகிறது.

அவ்வாறு பறிமுதல் செய்யப்படுவதன் மூலம் திரளும் நிதியை உக்ரேனுக்குக் கொடுத்து உதவ தமது நட்பு நாடுகளுடன் அமெரிக்கா அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக மூத்த அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகள் கூறினர்.

உக்ரேனுக்கான நிதி ஆதரவு வற்றி வரும் நிலையில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை அமெரிக்காவில் எதிர்விளைவை ஏற்படுத்தும் சாத்தியத்தை அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் சிலர் சுட்டினர்.

நியூயார்க் மத்திய வங்கியில் தங்களது நிதியை வைக்க உலகின் பல நாடுகள் தயங்கும் என்பது அவர்களின் கருத்து.

குறிப்புச் சொற்கள்