ஜப்பான் நிலவு ஆய்வுக் கருவி நிலவின் சுற்றுப்பாதையினுள் நுழைந்தது

ஜப்பான் நிலவு ஆய்வுக் கருவி நிலவின் சுற்றுப்பாதையினுள் நுழைந்தது

1 mins read
2f881801-2bc6-442e-857c-499f1b64246e
ஜப்பானின் விண்வெளி ஆய்வு டிசம்பர் 25 ஆம் தேதி அன்று நிலவின் சுற்றுப்பாதையினுள் நுழைந்தது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் விண்வெளி ஆய்வுக் கருவி டிசம்பர் 25 ஆம் தேதி அன்று நிலவின் சுற்றுப்பாதையினுள் நுழைந்தது. ஜனவரி மாதம் முதன்முதலாக வெற்றிகரமாக சந்திரனில் கால்பதிக்கக் காத்திருக்கும் ஜப்பானுக்கு இது ஒரு முக்கிய படியாக அமைகிறது.

சந்திரனை ஆய்வு செய்வதற்கான ஸ்மார்ட் லேண்டர் (ஸ்லிம்), சந்திர மேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட இலக்கிலிருந்து 100 மீட்டர் தொலைவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், “மூன் ஸ்னைப்பர்” என்றும் அழைக்கப்படுகிறது.

ஜப்பான் நேரப்படி ஜனவரி 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நிலவை நோக்கி லேண்டர் இறங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்பரப்பில் அதன் தரையிறக்கம் 20 நிமிடங்களுக்குப் பிறகு திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜாக்சா கூறியுள்ளது.

மேலும், இந்த தரையிறக்கம் மிக துல்லியமாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.

பொம்மை செய்யும் நிறுவனத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் லேண்டர், டென்னிஸ் பந்தை விட சற்று பெரியதாக இருக்கும்.100 மீட்டருக்குக் குறைவாக அமைத்திருக்கும் ஸ்லிமின் பிழை விளிம்பு, அதன் துல்லியத்தை காட்டுகிறது என்றும் ஜாக்சா தெரிவித்தது.

இந்த ஆய்வுக் கருவி, எளிதில் நிலவின் பெர்மாஃப்ரோஸ்ட்டை மாதிரியை துல்லியமாக சேகரிக்க உதவும் என்றும், அங்குள்ள நீர் ஆதாரங்களைச் சுற்றியுள்ள மர்மங்களை வெளிக்கொணர விஞ்ஞானிகளுக்கு உதவும் என்றும், ஜாக்ஸாவின் ஸ்லிம் திட்ட மேலாளர் ஷினிசிரோ சகாய் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்