ஆஸ்கர் விருது ‘பெரசைட்’ திரைப்பட நடிகர் மாண்டார்

ஆஸ்கர் விருது ‘பெரசைட்’ திரைப்பட நடிகர் மாண்டார்

1 mins read
ab0e673f-84a7-4300-b37a-e37409bd4f57
லீ சுன் கியுன் காரில் சுயநினைவின்றி கிடந்தார். - படம்: ஏஎஃப்பி

சோல்: ஆஸ்கார் விருது வென்ற தென்கொரியப் படமான ‘பெரசைட்’டில் நடித்த லீ சுன் கியுன் மாண்டு கிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்ததாக தென்கொரிய அதிகாரிகள் கூறினர்.

தென்கொரிய நேரப்படி புதன்கிழமை காலை தலைநகர் சோலில் கார் ஒன்றில் லீ சுயநினைவின்றி கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாகக் கடிதம் எழுதிவிட்டு லீ வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக அவரது மனைவி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்