சீனா: சுதந்திரம் பற்றி பேசினால் கூடுதல் தடைகள் விதிக்கப்படும்

1 mins read
a09cd2ca-644c-4f96-a6a8-30114e079ad7
சீனா தனக்குப் பொருளியல் ரீதியாக நெருக்குதல் தருவதாக தைவான் குற்றம் சாட்டியது. - படம்: தமிழ் முரசு

பெய்ஜிங்: தைவானை ஆளும் கட்சி சுதந்திரம் குறித்து பேசுவதை நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராகக் கூடுதல் வர்த்தகத் தடை விதிக்கப்படும் என்று சீன அரசாங்கம் டிசம்பர் 27ஆம் தேதியன்று எச்சரிக்கை விடுத்தது.

ஜனவரி மாதத்தில் தைவானில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.

அண்மையில் தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்களுக்கான வரிக் குறைப்பு இனி இருக்காது என சீனா அறிவித்திருந்தது.

இதையடுத்து, சீனா தனக்குப் பொருளியல் ரீதியாக நெருக்குதல் தருவதாகவும் தனது தேர்தலில் தலையிடுவதாகவும் தைவான் குற்றம் சாட்டியது.

குறிப்புச் சொற்கள்