தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத மின்னிலக்க நாணயச் சந்தைகளை முடக்குகிறது இந்தியா

1 mins read
def088fb-e2e4-41cb-be91-9c4e576b5014
பினான்ஸ் உள்ளிட்ட நாணயச் சந்தை இணையத்தளங்களை முடக்க இந்தியா முயன்று வருகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: கிரிப்டோ என்னும் மின்னிலக்க நாணயச் சந்தை இணையத்தளங்கள் சிலவற்றுக்கு இந்தியா தடை விதிக்க முயன்று வருகிறது.

பினான்ஸ் போன்ற வெளிநாட்டு கிரிப்டோ சந்தைத் தளங்கள் சட்டவிரோமாக இயங்குவதற்கு எதிரான இந்தியாவின் ஒரு நடவடிக்கை இது. உள்நாட்டில் அத்தகைய இணையத்தளங்களைப் பயன்படுத்த இயலாத வகையில் அவற்றைத் தடுப்பது அரசாங்கத்தின் நோக்கம்.

இது தொடர்பாக பினான், கிரேகென், குகாயின் மற்று ஹுயோபி உள்ளிட்ட ஏராளமான இணையத்தளங்கள் சட்டத்திற்கு இணங்கி நடக்கக் கேட்டுக்கொள்ளும் எச்சரிக்கைக் கடிதத்தை இந்தியாவின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அனுப்பி உள்ளது. அத்துடன், இதுபோன்ற ஒன்பது நிறுவனங்களின் இணையத்தளங்களை தடுத்து நிறுத்துமாறு தகவல் தொடர்பு அமைச்சை அது கேட்டுக்கொண்டு உள்ளது. வியாழக்கிழமை (டிசம்பர் 28) அப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்து உள்ளது.

“ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியப் பயனாளர்களை ஈர்த்து வருகின்றன. ஆனால், அவை இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை.

“மேலும், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை முறியடிக்கும் கட்டமைப்புக்கு அவை உட்படவில்லை,” என்று அறிக்கை கூறியது.

குறிப்புச் சொற்கள்