கலிஃபோர்னியா கடலோரப் பகுதிகளில் பேரலைகள்

1 mins read
0889315e-39b7-4d6e-897e-41c2025c71db
கலிஃபோர்னியா கடற்கரைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் கடலோரப்பகுதிகளில் பேரலைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் கடற்கரைகளுக்கும் கடலோரச் சாலைகளுக்கும் போக வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

6.1 மீட்டர் வரை உயரமுள்ள பேரலைகள் கரை மீது மோதுவதால் கடற்கரை அருகில் உள்ள வீடுகள் சேதமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கலிஃபோர்னியா கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்துவந்தது.

டிசம்பர் 30ஆம் தேதியிலிருந்து கலிஃபோர்னியாவின் தென்பகுதிகளில் உள்ள பல கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.

பேரலைகளின் உயரம் 8 மீட்டரிலிருந்து 9 மீட்டர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்புச் சொற்கள்