சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் வெனிஸ்

1 mins read
f6c83439-e4bf-4ab3-be22-2b7de77890fd
சுற்றுலாப் பயணிகளின் குழுக்களில் 25 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, ஒலிபெருக்கிகள் பயன்டுத்தக் கூடாது.  - படம்: இபிஏ

ரோம்: ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வெனிசில் புதிய தடைகள் நடப்புக்கு வரவிருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் குழுக்களில் 25 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது.

பெரும் கூட்டமாக வெனிஸ் நகருக்குள் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடாது என்பதைக் கருதி அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்தது. புதிய நடைமுறை வரும் ஜூன் மாதம் முதல் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒலிபெருக்கிகள் குழப்பம் மற்றும் இடையூறு விளைவிப்பதால் அவை தடை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற நடவடிக்கையால் நகரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எந்தவிதமான சிரமங்கள் இருக்காது என்றும் அதிகாரிகள் கூறினர்.  

குறிப்புச் சொற்கள்