தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புயலுக்குப் பின் கனமழை: தீரா துயரத்தில் ஆஸ்திரேலிய கிழக்குக் கரையோர மக்கள்

1 mins read
42723cb3-25ae-4ff6-963e-3cbfca17d247
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் எனப்படும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை மீண்டும் புயல் தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. - படம்: இபிஏ

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஞாயிறன்று கனமழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் வெள்ளம், சாலைகள் நீரில் முழ்கின. இதனால், அங்கு கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியான நியூ சவுத் வேல்ஸ், தென்கிழக்கு பகுதியான குவீன்ஸ்லாந்து ஆகியவற்றில் ஜனவரி 1ஆம் தேதியன்று வழக்கமாக ஒரு மாதம் முழுக்க பெய்ய வேண்டிய மழை அன்று நாளில் பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதுபோல் ஜனவரி 2ஆம் தேதியும் கனமழை பெய்யும் என்று வானிலை கணிப்புகள் கூறுகின்றன. மழையின் அளவு 250 மில்லி மீட்டர் என்றும் இது ஜனவரி மாத சராசரி மழையை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளி வழி தகவல் பதிவிட்ட வானிலை பிரிவு செய்தியாளரான மிரியம் பிராட்புரி, “நிலைமை ஆபத்து மிகுந்ததாக உள்ளது. இங்கு பொழியக்கூடிய கடும் மழை அநேகமாக நாள்முழுவதும் புயல்காற்றுடன் கலந்து வருவதுடன் அதனால் ஏற்படும் திடீர் வெள்ளம் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக அமையலாம்,” என்றார்.”

சுற்றுப்பயணிகள் அதிகம் வருமையளிக்கும் கோல்ட் கோஸ்ட் பகுதிதான் அதிக பாதிப்பு அடைந்திருப்பதாக அவர் கூறினார். இங்கு வெள்ள நீர் நிறைந்த சாலைகளில் பல வாகனங்கள் முடங்கியிருப்பதாக சமூக ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்