தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான் நிலநடுக்கம்: தப்பித்தோரை அச்சுறுத்தும் கடுங்குளிர், நிலச்சரிவு அபாயம்

1 mins read
85d38161-8068-428f-aaa3-ceae63204b87
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் துயர்துடைப்பு முகாம்களில் தங்குகின்றனர். - படம்: ராய்ட்ட்ர்ஸ்

தோக்கியோ: அண்மையில் ஜப்பானைப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று 62ஆக அதிகரித்தது.

இந்நிலையில், நிலநடுக்கத்திடமிருந்து தப்பித்தோர் துயர்துடைப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தின் சீற்றத்திலிருந்து தப்பித்த அவர்கள் கடுங்குளிராலும் கனமழையாலும் அவுதயுறக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனவே, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க ஜப்பானிய அதிகாரிகள் விரைந்து செயல்படுகின்றனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதனால் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகள் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

நிலநடுக்கம் காரணமாக மிகக் கடுமையாகச் சேதமடைந்த சாலைகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றால் மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்