தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்; மீட்க இந்தியக் கடற்படை விரைந்தது

1 mins read
aa29070c-02db-4160-86ee-5d260a47d855
சோமாலியா கரையோரப் பகுதி அருகே இந்தியக் கடற்படை நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

பதினைந்து இந்திய மாலுமிகளுடன் அரபிக்கடலில் சென்ற கப்பல் ஒன்று சோமாலிய கடற்பகுதியில் கடத்தப்பட்டது. இதனையடுத்து அந்தக் கப்பலை மீட்க இந்தியக் கடற்படை விரைந்துள்ளது.

லைபீரியா கொடியுடன் ‘எம்வி லிலா நார்போல்க்’ என்ற பெயர் கொண்ட கப்பல் ஒன்று சோமாலியக் கடற்பகுதி அருகே கடத்தப்பட்டதாக இந்தியக் கடற்படைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த கடற்படை விமானம் ஒன்று, அந்தக் கப்பலை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. மேலும், அந்தக் கப்பலில் உள்ள மாலுமியைத் தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஐ.என்.எஸ். சென்னை, கடத்தப்பட்ட கப்பல் நோக்கி விரைந்தது.

குறிப்புச் சொற்கள்