பேரரசராக பதவியேற்கும்வரை எவரையும் சந்திக்கப்போவதில்லை: ஜோகூர் சுல்தான்

பேரரசராக பதவியேற்கும்வரை எவரையும் சந்திக்கப்போவதில்லை: ஜோகூர் சுல்தான்

1 mins read
de8b7f8c-5c81-424c-84b5-b30d536287b1
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் தமது தனிப்பட்ட இல்லத்தில். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதி நாட்டின் 17வது பேரரசராக அதிகாரபூர்வமாகப் பதிவியேற்கும் வரையில் எவரையும் சந்திக்க அனுமதி வழங்கப்போவதில்லை என ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே சந்திக்க ஒப்புதல் வழங்கியிருந்தவர்கள், ஜோகூர் முதல்வர், மாநில அரசாங்க அதிகாரிகளை மட்டுமே தாம் சந்திக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மகத்தான பொறுப்பை ஏற்பதற்கு முன், இக்காலகட்டத்தில் தாம் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட இருப்பதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்