தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம்: நஜிப் கடும் அதிருப்தி

1 mins read
213e6bed-9479-4961-bfdb-a12d4c831123
நஜிப் ரசாக். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: நெட்ஃபிளிக்சில் திரையிடப்படும் ‘மேன் ஒன் த ரன்’ ஆவணப்படம் குறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அந்த ஆவணப்படத்தில் மலேசியாவின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி டாமி தாமஸ், ‘சரவாக் ரிபோர்ட்’ ஆசிரியர் கிளேர் ரியூகாசல்-பிரௌன் ஆகியோர் தோன்றி கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்தக் கருத்துகள் ஏற்புடையதல்ல என்று தெரிவித்த நஜிப், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாகக் கூறினார்.

மேலும், அந்த ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் திரையிடக்கூடாது என்று கூறிய நஜிப், அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நெட்ஃபிளிக்ஸ் திரையிடும் அந்த ஆவணப்படம் குறித்து நஜிப்பின் வழக்கறிஞர் மலேசிய உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்