வெள்ளை மாளிகை வாயிற்கதவை மோதிய வாகனம்

வெள்ளை மாளிகை வாயிற்கதவை மோதிய வாகனம்

1 mins read
001ac719-a25b-424b-b1c6-9802fb79d96c
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வாயிற்கதவை வாகனம் ஒன்று மோதியது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வாயிற்கதவை வாகனம் ஒன்று மோதியது.  இச்சம்பவம், திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் நடந்தது என்று அமெரிக்காவின் ரகசிய சேவை தெரிவித்தது. 

இந்த சம்பவத்திற்கான காரணத்தை காரணத்தையும் சம்பவம் நடந்த விதத்தைப் பற்றியும்  விசாரிக்க  அந்த ஓட்டுநர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அமெரிக்க ரகசிய சேவைத் தலைவர் ஆண்டனி குக்லியெல்மி தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. 

குறிப்புச் சொற்கள்