பிரெஞ்சுப் பிரதமராக 34 வயது கேப்ரியல் அட்டல் தேர்வு

1 mins read
c88f2832-1005-4bdc-9a07-31ca482ae15e
இதற்கு முன் கேப்ரியல் அட்டல் பிரான்சின் கல்வி அமைச்சராக செயல்பட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பிரெஞ்சுப் பிரதமராக 34 வயது கேப்ரியல் அட்டலைத் தேர்வு செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் இமானுவல் மெக்ரோன்.

பிரெஞ்சு வரலாற்றில் இவ்வளவு குறைந்த வயதில் நாட்டின் பிரதமராக பதவியேற்பது இதுவே முதல்முறை. இதற்கு முன் கேப்ரியல் அட்டல் பிரான்சின் கல்வி அமைச்சராக செயல்பட்டார்.

பிரெஞ்சு பிரதமர் பொறுப்பிலிருந்து எலிசபெத் போர்ன் ஜனவரி 8ஆம் தேதியன்று பதவி விலகினார்.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல், பிரான்சில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகியவற்றுக்குப் புத்துயிர் ஊட்டும் முயற்சியாக புதிய பிரதமரை நியமிக்கும் பணியில் அதிபர் மெக்ரோன் ஈடுபட்டார்.

பிரான்சில் ஓய்வுக்காலத் திட்டத்தில் சீர்திருத்தம், குடிநுழைவு சட்டம் தொடர்பாக ஓராண்டுக்கு முன் எழுந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு பிரதமர் பதவியில் அதிபர் மெக்ரோன் மாற்றம் கொண்டுவர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய இந்த முடிவு மேற்குறிப்பிட்ட அரசியல் முடிவுகளுக்கு மாற்றாக அமையாது என்று கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக மற்ற முன்னுரிமைத் திட்டங்களில் தமது அரசு கவனம் செலுத்தும் என்பதையே இது காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்