தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெட்ஸ்டார் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகும் பரதன் பசுபதி

1 mins read
3f493052-f76a-4e23-aaeb-6fd81cd047be
திரு பரதன் பசுபதி (இடம்) ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து மார்ச் மாதம் jf1ஆம் தேதி பதவி விலகுவார். அவருக்கு பதிலாக திரு ஜான் சிமியோனே தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் 12 ஆண்டுகளாக இருந்த திரு பரதன் பசுபதி மார்ச் 1ஆம் தேதி பதவி விலகுகிறார்.

அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை குவாண்டாஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான திரு ஜான் சிமியோனே ஏற்க உள்ளார்.

ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தின் 51% பங்குகளை சிங்கப்பூர் நிறுவனமான வெஸ்ட்புரூக் இன்வெஸ்ட்மன்ட் நிறுவனம் வைத்துள்ளது. மீதி 49% பங்குகளை குவாண்டாஸ் நிறுவனம் வைத்துள்ளது.

திரு பரதன், வயது 55, வேறு வாய்ப்புகளைப் தேடிப் போக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக பொறுப்பேற்க உள்ள திரு ஜான் சிமியோனே, 55, சிங்கப்பூரில் வசிப்பவர். இவர் தற்பொழுது குவாண்டாஸ் நிறுவனத்தின் ஆசியப் பிரிவுக்குத் துணைத் தலைவராக உள்ளார் என்று அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்