கனமழை, பலத்த காற்று: கமலா ஹாரிசின் விமானம் திருப்பிவிடப்பட்டது

கனமழை, பலத்த காற்று: கமலா ஹாரிசின் விமானம் திருப்பிவிடப்பட்டது

1 mins read
eb48853f-2462-4768-8f4c-b1c403d2037e
விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதாகவும் துணை அதிபர் ஹாரிஸ் வீடு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: கனமழை, பலத்த காற்று காரணமாக அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசின் ‘ஏர் ஃபோர்ஸ் 2’ விமானம் வேறு பயணப் பாதைக்குத் திருப்பிவிடப்பட்டது என்று அவரது அலுவலகம் தெரிவித்தது.

அட்லான்டாவிலிருந்து வந்துகொண்டிருந்த விமானம் டுல்ஸ் அனைத்துலக விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாகத் துணை அதிபர் ஹாரிசின் செய்தித்தொடர்பாளர் கிர்ஸ்டன் எலன் அறிக்கை வெளியிட்டார்.

விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதாகவும் துணை அதிபர் ஹாரிஸ் வீடு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்