இடியுடன் கூடிய கனமழை, சுழல் காற்று காரணமாக மூவர் மரணம்

இடியுடன் கூடிய கனமழை, சுழல் காற்று காரணமாக மூவர் மரணம்

1 mins read
a4ba349d-52a0-4a3c-86e6-12f9650ccc47
சுழல் காற்று காரணமாக தரைமட்டமான வீடு. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான ஃபுளோரிடாவை ஜனவரி 9ஆம் தேதியன்று இடியுடன் கூடிய கனமழையுடன் சுழல் காற்றும் புரட்டிப்போட்டன.

இதில் குறைந்தது மூவர் மாண்டனர்.

சுழல் காற்று காரணமாக கட்டடங்கள் சேதமடைந்ததுடன் மின்சாரக் கம்பிகளும் துண்டிக்கப்பட்டன.

அதுமட்டுமல்லாது, பல மரங்கள் வேருடன் சாய்ந்தன.

இதற்கிடையே, கேஸ்கேட், ஒலிம்பிக் மலைகளில் பனிப்புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்