தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$2.3 மி. பெறுமானமுள்ள நகைகள்: ஜோ லோவின் தாயாரிடம் விசாரணை நடத்த அனுமதி

1 mins read
fdf6f0e1-7f4a-4cb7-8cab-5e6173b3abd5
1எம்டிபி நிறுவனத்தின் இரண்டு துணை நிறுவனங்களுக்குச் சொந்தமான பணத்தைப் பயன்படுத்தி நகைகள் வாங்கியதாக ஜோ லோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. - படம்: இணையம்

கோலாலம்பூர்: 1எம்டிபி மோசடி தொடர்பாக மலேசிய வர்த்தகர் தேடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜோ லோவிடமிருந்து அவரது தாயார் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் ($2.3 மில்லியன்) பெறுமானமுள்ள நகைகளைப் பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

இதுதொடர்பாக, ஜோ லோவின் தாயாரான கோ கெய்க் வீயிடம் விசாரணை நடத்த 1எம்டிபி நிறுவனத்தின் இரண்டு துணை நிறுவனங்களுக்கு மலேசிய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த இரண்டு துணை நிறுவனங்களுக்கும் சொந்தமான பணத்தைப் பயன்படுத்தி அந்த நகைகளை வாங்கியதாக ஜோ லோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோவின் இருப்பிடம் தெரியவில்லை.

துணை நிறுவனங்கள் கோவிடம் எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளிக்க அவருக்கு 14 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்