அடுத்த வாரத் தொடக்கத்தில் இங்கிலாந்தில் பனிமழை பெய்யும் என தகவல்

அடுத்த வாரத் தொடக்கத்தில் இங்கிலாந்தில் பனிமழை பெய்யும் என தகவல்

1 mins read
bdb56e8a-e4ed-4b36-853e-89fdf2ad2d41
அடுத்த வார தொடக்கத்தில் லண்டனிலும்,இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் பனிமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  - படம்: இபிஏ

லண்டன்: ஐரோப்பா முழுவதும், வெப்பநிலை இவ்வார இறுதியில் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்.

அதனால், அடுத்த வாரத் தொடக்கத்தில் லண்டனிலும் பிரிட்டனின் பிற பகுதிகளிலும் பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் வெப்பநிலை, மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை என்றும் குறையும் என்றும் பாரிசில் உறைநிலைக்குக் கீழ் 2.5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஐரோப்பாவில் அடுத்த வாரத்தின் பெரும்பாலான நாள்களில் இத்தகைய குளிர் நீடிக்கும்.

நார்டிக் தலைநகரங்களான ஹெல்சின்கியிலும் ஒஸ்லோவிலும் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் 18.5 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. இந்தக் குளிரை எதிர்கொள்ள ஐரோப்பா தயார்நிலையில் உள்ளது. அதிக எரிவாயுச் சேமிப்பு, குறைவான தொழில்துறைச் செயல்பாடுகள் போன்ற நடவடிக்கைகளால் அது சாத்தியமானது.

அடுத்த வாரத்திலிருந்து மத்திய தரைக்கடல் பகுதியில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவும். இதனால், மட்ரிட்டிலும் ரோமிலும் வெப்பநிலை 14 - 15 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கும் என்று புளூம்பெர்க் கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்